கும்ப ராசி அன்பர்களே..!!குருப்பெயர்ச்சி பலன்கள் – 2019

இதுவரை ஜீவன ஸ்தானமான பத்தாம் இடத்தில் இருந்துவந்த குருபகவான் இதற்குப் பிறகு லாபஸ்தானமான பதினொன்றாம் இடத்திலிருந்து பலவிதமான நன்மைகளைத்  தர இருக்கின்றார். எதிர்பார்த்த ஆதரவுகள் கிடைக்கும். மறைந்து இருந்த திறமைகளை வெளிப்படுத்தி லாபகரமான வாய்ப்புகளைப் பெறுவீர்கள்.

குழப்பங்களிலிருந்து விடுபட்டு சுலபமாக முடிவெடுப்பீர்கள். அதிர்ஷ்ட வாய்ப்புகள் தேடிவரும். உங்களுக்குக் கீழ் வேலை செய்பவர்கள் உங்கள் பேச்சைக் கேட்டு நடப்பார்கள்.   தான் உண்டு தன் வேலை உண்டு என்று கவனமாகச் செயல்களைச் செய்து புகழடைவீர்கள். வெளியூரில் இருந்து நல்ல செய்திகள் வரும். அசையும், அசையா சொத்து   சேர்க்கையும் உண்டாகும். தள்ளிப்போன திருமணம் உடனடியாகக் கைகூடும். 

உங்களுக்கு உத்தரவாதம் கொடுத்தவர்கள் சிறிது தயக்கத்துடன் நிறைவேற்றுவார்கள். மனதில் இனம்புரியாத பயம் தொடரும். பெரியோர்களை மதித்து அவர்களின்   ஆதாரவையும் பெறுவீர்கள். செய்தொழிலில் இருந்த பிரச்னைகள் அகலும். வழக்குகளால் சாதகமான தீர்ப்பு கிடைக்க வாய்ப்பில்லாததால் பொறுமையுடன் அமைதி காக்கவும். 

புத்திரபாக்கியத்தை எதிர்பார்த்துக் காத்திருந்தவர்களுக்கு மழலை பாக்கியம் கிடைக்கும். பொருளாதாரம் ஏற்றமாகவே அமையும். புதிய லாபம் தரும் சேமிப்புத் திட்டங்களில்   சேர்வீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி குதூகலம் நிறையும். குடும்பத்துடன் சுற்றுலா சென்று வருவீர்கள். நெருக்கடிகள், பிரச்னைகள் ஏதுமின்றி ராஜபாட்டையில் நடைபோடும்   காலகட்டமிது. 

உத்தியோகஸ்தர்களுக்கு..
இந்தக் குருப்பெயர்ச்சியில் புதிய முயற்சிகள் கைகூடும். மேலதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். நண்பர்கள் உங்களுக்கு உதவிக்கரமாக இருப்பார்கள். உங்கள் பேச்சுக்கு மதிப்பு   கூடும். அலுவலகத்தில் உங்கள் மீது நடந்த வழக்குகள் முடிவடைந்து, மறுபடியும் பழைய பதவிகளைப் பெறுவீர்கள். மற்றபடி கடின உழைப்பை தாரக மந்திரமாகக் கொண்டு   செயலாற்றுவீர்கள். 

வியாபாரிகள்..
கொடுக்கல் வாங்கல் விஷயங்களில் அனுகூலமான திருப்பங்களைக் காண்பார்கள். உங்களின் பேச்சுத்திறனால் வாடிக்கையாளர்களைக் கவருவீர்கள். வியாபாரத்திலிருந்த   தடைகளும், எதிர்ப்புகளும் இந்தக் காலகட்டத்தில் நீங்கக் காண்பீர்கள். கூட்டுத் தொழிலில் ஒற்றுமையைக் காண்பீர்கள். 

விவசாயிகளுக்கு..

புதிய சாதனங்களை வாங்கி வியாபாரத்தை விரிவுபடுத்துவார்கள். கடன் பிரச்னைகள் திடீரென்று ஏற்பட்டாலும், அவைகளை சாதுரியத்துடன் சமாளிப்பீர்கள். குடும்பத்தில் சுப  நிகழ்ச்சிகள் நடக்கும். சந்தையில் உங்கள் விளைபொருட்களுக்கு நல்ல விலை கிடைக்கும். 

அரசியல்வாதிகளுக்கு..

புதிய முயற்சிகளில் தங்கள் பெயர், புகழ் அதிகரிக்கும். கட்சி மேலிடம் உங்களின் சிறப்பான திறனைக் கவனிப்பார்கள். அதனால் புதிய பொறுப்புகளைக் கொடுத்துக்   கௌரவப்படுத்தும். உடல் சோர்வைப் பொருட்படுத்தாமல் உழைப்பீர்கள். தொண்டர்களும் உங்களுக்கு உதவிக்கரமாக இருப்பார்கள். 

கலைத்துறையினருக்கு..

புதிய வாய்ப்புகளைப் பெறுவார்கள். புதிய பாணியில் உங்கள் திறமைகளை வெளிப்படுத்துவீர்கள். சக கலைஞர்களின் ஆதரவையும் பெறுவீர்கள். சந்தர்ப்பங்களை   நழுவவிடாமல் இந்த குருப்பெயர்ச்சியில் நல்ல வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொள்ளவும். 

பெண்மணிகளுக்கு..

இந்த குருப்பெயர்ச்சியில் பெற்றோர் வழியில் பெருமைகள் கூடும். பிள்ளைகளால் பெயரும், புகழும் கிடைக்கும். ஆன்மிகத்திலும், தெய்வீகத்திலும் நாட்டம் அதிகரிக்கும்.   கணவருடனான உறவு சுமுகமாகவே இருக்கும். வருமானம் எதிர்பார்த்த அளவுக்கு இருக்கும். 

மாணவமணிகளுக்கு..

இந்தக் காலகட்டத்தில் படிப்பில் அக்கறை நாட்டுவார்கள். எதிர்பார்த்த மதிப்பெண்களைப் பெறுவார்கள். பெற்றோர் உங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றுவார்கள். 

பரிகாரம்: தேனியில் உள்ள குச்சனூர் சனீஸ்வர சுவாமியை வழிபட ஆரோக்கியம் சார்ந்த இன்னல்கள் நீங்கி புத்துணர்ச்சி பெறுவீர்கள்.