துலா ராசி அன்பர்களே.. குருப்பெயர்ச்சி பலன்கள் – 2019

இதுவரை தன, வாக்கு, குடும்ப ஸ்தானமான இரண்டாம் இடத்தில் இருந்துவந்த குருபகவான் இதற்குமேல் தைரிய வீரிய ஸ்தானத்திற்கு இடம் பெயர்கின்றார். முயற்சிக்கு  ஏற்ப பல முன்னேற்றங்களைக் காணப்போகிறீர்கள். 

வருமானம் எதிர்பார்த்த அளவுக்கு இருக்கும். பணத்தட்டுப்பாடு வருவதற்கு வாய்ப்பில்லை. முகத்தில் பொலிவும், நடையில் ஒருவித மிடுக்கும் உண்டாகும். குழந்தைகளின்  முன்னேற்றம் சிறப்படையும். குழந்தையில்லாதவர்களுக்கு புத்திரப்பேறு பாக்கியம் கிடைக்கும். சமுதாயத்தில் நல்ல கௌரவம், அந்தஸ்தான பதவிகளைப் பெறுவீர்கள். 

பகையும், பிரச்னைகளும் இருந்த இடம் தெரியாமல் மறைந்துவிடும். சிலருக்கு வெளிநாடு செல்லும் பாக்கியங்கள் கிடைக்கும். தெய்வ சிந்தனை அதிகரித்து ஆன்மீகத்தில்  பெருமளவு ஈடுபாடு உண்டாகும். சிலருக்கு புதிய வண்டி வாகனங்கள் வாங்கும் யோகம் உண்டாகும். சிலர் ஆடம்பரமான வீட்டிற்கு மாற்றம் செய்வார்கள். 

உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். யோகா, பிராணாயாமம் போன்றவைகள் செய்து உடல்நலம் மனவளம் ஆகியவற்றை மேம்படுத்திக் கொள்வீர்கள். நெருங்கிய  உறவினர்களின் வருகையால் வீடு களைக்கட்டும். குடும்பத்துடன் குலதெய்வப் பிரார்த்தனை செய்வீர்கள். 

உத்தியோகஸ்தர்களுக்கு..

தடைப்பட்டிருந்த காரியங்கள் அனைத்திலும் வெற்றி வாகை சூடுவீர்கள். மேலதிகாரிகள் பாராட்டும் வகையில் நடந்துகொள்வீர்கள். பதவி உயர்வு பெறுவதற்கான  அறிகுறிகளும் தென்படும். அதேநேரம் சக ஊழியர்களிடம் உங்கள் ரகசியங்களைப் பகிர்ந்துகொள்ள வேண்டாம். 

வியாபாரிகளுக்கு..

இந்த காலகட்டத்தில் தங்கள் பொருட்களை புதிய சந்தைகளில் விற்க முயற்சி செய்வார்கள். வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரிக்கும். புதிய  வர்த்தகம் செய்யும் எண்ணம் மேலோங்கும். அதேநேரம் அதைத் தீவிரமாக ஆலோசித்த பிறகே செயல்படுத்தவும். தடைகளைச் சமாளிக்கும் தைரியம் உண்டாகும். வீண்  கடன்களை வாங்கி சிக்கிக்கொள்ளாமல் இருப்பது நல்லது. 

விவசாயிகளுக்கு..

தோட்டம் தோப்பு உள்ளிட்ட பணிகள் அனைத்தும் சுமுகமாக முடியும். விற்பனையில் நல்ல லாபம் கிடைக்கும். இதனால் பழைய குத்தகை பாக்கிகளையும் அடைப்பீர்கள்.  உங்களின் வருமானத்தைக் கூறுபோட நினைக்கும் இடைத்தரகர்களிடம் எச்சரிக்கையாக இருக்கவும். 

அரசியல்வாதிகளுக்கு..

திறமையாகப் பேசி மற்றவர்களைக் கவருவீர்கள். பொறுப்புகளைச் சரியாக உணர்ந்து செயல்படுத்துவார்கள். முக்கிய பிரச்னைகளுக்குக்காகப் போராடும் போது  தன்னிச்சையாகச் செயல்படாமல் கட்சி மேலிடத்தின் சம்மதத்துடன் செயல்படுத்துங்கள். மற்றபடி இந்த குருப்பெயர்ச்சியில் தொண்டர்களின் ஆதரவு உங்களுக்கு  நல்லமுறையில் இருக்கும். 

கலைத்துறையினருக்கு..

புதிய ஒப்பந்தங்களால் மனநிம்மதி அடைவீர்கள், வருமானமும் நன்றாக இருக்கும். புதிய நண்பர்களின் மூலம் அனுகூலங்கள் கிடைக்கும். ரசிகர்களின் எண்ணங்களுக்கு  முக்கியத்துவம் கொடுத்துச் செயல்படுவீர்கள். 

பெண்மணிகளுக்கு.. 

குடும்பத்தில் சாதகமான நிலை தென்படும் உங்களின் பேச்சினால் அனைவரையும் கவர்வீர்கள். கணவரிடம் நிலவிவந்த கருத்துவேறுபாடுகள் நீங்கும். இந்தக்  குருப்பெயர்ச்சியில் பணவரவு சீராகும். சிக்கனமாக இருந்து வீண் செலவுகளைத் தவிர்க்கவும். 

மாணவமணிகளுக்கு..

இந்தாண்டு படிப்பில் முதலிடத்திற்கு வருவார்கள். பெற்றோர்களுக்குப் பெருமை சேர்ப்பீர்கள். விரும்பிய துறையில் முன்னேறலாம். 

பரிகாரம்: திங்கட்கிழமைதோறும் சிவபெருமானுக்கு வில்வ இலைகள் சாத்தி வழிபட்டு வர மனதில் தன்னம்பிக்கையும், மகிழ்ச்சியும் உண்டாகும்.