மகர ராசி அன்பர்களே..!! குருப்பெயர்ச்சி பலன்கள் – 2019

இதுவரை உங்கள் ராசிக்கு லாப ஸ்தானத்தில் சஞ்சரித்து வந்த குருபகவான் பெயர்ச்சியாகி அயன, சயன போக ஸ்தானத்தில் ஆட்சி பெற இருக்கிறார்.

உங்கள் அறிவும், துணிச்சலும் கூடும். எதிர்ப்புகளை முறியடிப்பீர்கள். தீவிர முயற்சியின் பேரில் கடினமான செயல்களையும் செய்து முடிப்பீர்கள். எதிர்பார்த்த பலன்களும்  கிடைக்கும். குழந்தைகள் விஷயத்தில் சரியான முடிவுகளை எடுப்பீர்கள். உடன்பிறந்தோரின் ஆதரவு கிடைக்கும். 

கொடுத்த கடன் தாமதமாக கைக்கு வந்துசேரும். அனைவரிடமும் நியாயமாக நடந்துகொள்வீர்கள். முன்கோபத்தை விட்டொழித்து அனைவரிடமும் சகஜமாகப் பழகுவீர்கள்.  நுணுக்கமான விஷயங்களையும் கற்றுக்கொள்வீர்கள். கடுமையாக உழைக்கவேண்டி வரும். சமுதாயத்தில் உயர்ந்த பொறுப்புகளையும் பெறுவீர்கள். 

புதிய முதலீடு செய்து தொழிலை விரிவுபடுத்துவீர்கள். மனதிற்கினிய பயணங்களைச் செய்வீர்கள். உடல் ஆரோக்கியம் மேம்படும். மனதில் இருந்துவந்த சஞ்சலங்கள்  மறையப்போகிறது. புதுவிதமான விஷயங்களுக்குச் செயல்வடிவம் கொடுப்பீர்கள். ஜாதகப்படி வெளிநாடு செல்லும் யோகங்கள் உண்டாகும். 

12-ல் குருபகவான் வருவதால் 50 சதவீத பலன்களை மட்டுமே இந்த ராசிக்காரர்கள் எதிர்பார்க்க முடியும். ஏழரை நாட்டுச் சனி நடைபெற்று வருவதால் அனைத்து  விஷயங்களையும் சற்று கவனத்துடன் கையாளுவது நன்மையைத் தரும். கருத்து வேறுபாடு, வம்பு, சண்டை, சச்சரவு போன்ற தேவையற்ற பிரச்னைகளில் தலையிடாமல்  தவிர்ப்பது நல்லது. 

முடங்கிய செயல்களும் மடமடவென்று நடக்கத் தொடங்கும். பங்குவர்த்தகத்தில் லாபம் காண்பீர்கள். பெற்றோர்கள் வழியிலிருந்த சுணக்கங்கள் மறைந்து குடும்பத்துடன்  இணைந்து வாழ்வீர்கள். திருமணமாகாதவர்களுக்குத் திருமணமும், புத்திரபாக்கியம் இல்லாதவர்களுக்குப் புத்திர பாக்கியமும் உண்டாகும். சிலர் இருக்கும் வீட்டைப்  புதுப்பிப்பீர்கள். 

உத்தியோகஸ்தர்களுக்கு..

வேலையில் சுமை அதிகரித்தாலும் அவைகளை முடிக்க மனதில் உற்சாகத்துடன் பணியாற்றுவீர்கள். மற்றபடி உழைப்புக்கேற்ற வருமானம் வந்துகொண்டிருக்கும். உங்களை  உதாசீனப்படுத்தும் சக ஊழியர்களைக் கண்டுகொள்ள வேண்டாம். வேலை விஷயமாக வெளியூர் பயணங்களை இந்த காலகட்டத்தில் செய்வீர்கள். 

வியாபாரிகளுக்கு..

விற்பனை விறுவிறுப்பாக நடக்கக் காண்பார்கள். கூடுதலாக உழைத்து மனஉறுதியுடன் செயல்பட்டு வருமானத்தைப் பெருக்க முனைவீர்கள். கொடுக்கல், வாங்கல்  விஷயங்கள் சீராக முடியும். நண்பர்களை கலந்தாலோசித்த பிறகே முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். 

விவசாயிகளுக்கு..

இந்தக் கால கட்டத்தில் விளைச்சல்கள் அதிகமாக இருக்கும் நீர்வரத்தும் அதிகமாக இருப்பதால் பாசன வசதிகளை மேம்படுத்துவீர்கள். கூடுதல் வருமானத்திற்கான  காய்கறிகள், கிழங்குகள் எனப் பயிர்செய்து பயன் பெறுங்கள். அதே நேரம் திட்டமிட்ட செயல்களில் சிறு சிறு தடை ஏற்பட்டு பிறகு முடியும். அதனால் புதிய கடன்களை  இந்தக் குருப்பெயர்ச்சியில் வாங்க வேண்டாம். 

அரசியல்வாதிகளுக்கு..

பெயரும், புகழும் அதிகரித்தாலும் உட்கட்சி விவகாரங்களில் சிக்கிக் கொள்ள நேரிடலாம். அதனால் அனாவசிய வாக்குவாதங்களில் ஈடுபட வேண்டாம். இருப்பினும்  போராட்டங்களில் புதிய உத்வேகத்துடன் ஈடுபடுவீர்கள். உங்கள் பொறுப்புகளைத் திட்டமிட்டுச் சரியாகச் செயல்படுத்து நல்லது. 

கலைத்துறையினருக்கு..

இந்தக் காலகட்டத்தில் புதிய ஒப்பந்தங்களைப் பெறுவார்கள். உங்களின் தனித்திறமையால் உங்களில் செயல்களில் முத்திரையைப் பதிப்பீர்கள். சமுதாயத்தில் மதிப்பு,  செல்வாக்கு உயரும். சக கலைஞர்கள் உங்களின் முன்னேற்றத்திற்கு ஓரளவு உதவுவார்கள். வருமானத்திற்கு இந்தக்குருப்பெயர்ச்சியில் எந்தக் குறையும் வராது. 

பெண்மணிகளுக்கு..

இந்தக் குருப்பெயர்ச்சியில் படிப்பில் அதிக மதிப்பெண்களை அள்ளுவார்கள். சக மாணவர்களின் ஒத்துழைப்பையும் பெறுவார்கள். 

பரிகாரம்: திருநள்ளாறு சென்று சனிபகவானைத் தரிசனம் செய்துவர எண்ணிய காரியங்களில் இருந்துவந்த தடைகள் நீங்கி சுபிட்சம் உண்டாகும்