மிதுன ராசி அன்பகளே! குருப்பெயர்ச்சி பலன்கள் – 2019

இதுவரை உங்கள் ராசிக்கு 6ம் இடமான ருண ரோக ஸ்தானத்தில் இருந்துவந்த குருபகவான் ராசிக்கு 7ம் இடமான சப்தம ஸ்தானத்திற்கு பெயர்ச்சி அடைகின்றார். இதுவரை  மனதாலும், உடலாலும் பல்வேறு இன்னல்களையும், ஏமாற்றங்களையும் சந்தித்த நீங்கள் இதற்குமேல் குருபகவானின் அருட்கடாட்சத்தை முழுமையாகப் பெற போகிறீர்கள்.

இந்த குருப்பெயர்ச்சியால் உங்கள் வாழ்க்கைத் தரம் உயரப்போகிறது. செய்தொழிலிலும் பெரியதொரு முன்னேற்றம் உண்டாகும். பொருளாதாரம் உயர்ந்தநிலையில் இருக்கும்.  இல்லத்திற்குத் தேவையான நவீன உபகரணங்களை வாங்குவீர்கள். நெடுநாளாக உங்களை வாட்டிவந்த உடலுபாதைகளிலிருந்து முழுவதுமாக விடுபடப்போகிறீர்கள். 

இல்லத்தில் திருமணம் போன்ற சுப காரியங்கள் நடக்கும். சிலருக்கு தங்கள் விருப்பம்போல் திருமணம் நடக்கும். குடும்பத்தில் சொத்து சம்பந்தப்பட்ட விஷயங்களில்  விட்டுக்கொடுத்துச் செல்வதன்மூலம் பாகப்பிரிவினை போன்ற விஷயங்கள் சுமுகமாக நடைபெறும். 

முக்கிய முடிவுகள் எடுக்கும் நேரத்தில் பெரியோர்களின் ஆலோசனைகளைக் கேட்டு எடுக்கவும். சில நேரங்களில் நண்பர்களின் அவமதிப்புக்கு உள்ளாக நேரிடும். உங்கள்  செயல்கள் அலைந்து திரிந்து முடிக்கவேண்டிவரும். சிலருக்கு, பிபீ, இதயம் சம்பந்தப்பட்ட நோய்கள் ஏற்படலாம். அரசாங்கத்திலிருந்து எதிர்பார்த்த சலுகைகள்  கிடைக்காமல் போக வாய்ப்புள்ளது. 

செய்தொழிலில் இருந்துவந்த பிரச்னைகள் தீரும். சமூகத்தில் மதிப்பும் மரியாதையும் கூடும். பெற்றோர்களின் ஆதரவும் சிறப்பாக இருக்கும். பயணங்களால் புதிய  அனுபவங்களைப் பெறுவீர்கள். 

உத்தியோகஸ்தர்களுக்கு..

குறைந்த உழைப்பால் அதிக பலன் கிடைக்கும். மேலதிகாரிகள் உங்களின் பணித் திறமைகளைப் பாராட்டுவார்கள். சக ஊழியர்களின் உதவியுடன் உங்களின் திறமைகளை  வளர்த்துக்கொள்வீர்கள். அலுவலகத்தில் புதிய சலுகைகளைப் பெறுவீர்கள். அதேநேரம் காலநேரத்தை வீணாக்காமல் உழைத்தால் மேலும் உயரிய பதவிகளைப் பெறலாம்.  இந்தாண்டு பணவரவுக்குக் குறைவிருக்காது. 

வியாபாரிகளுக்கு..

தீட்டிய திட்டங்கள் செயல்வடிவம் பெறத் தாமதமாகும். கூட்டாளிகளுக்குள் குழப்பமான சூழ்நிலை உருவாகும். அதனால் அவர்களை கலந்தாலோசிக்காமல் எந்தச் செயலையும்  செய்யவேண்டாம். வரவேண்டிய பணம் வரத் தாமதமாகும் என்பதால் திடீரென்று கடன் வாங்கும் நிலை ஏற்படும். 

விவசாயிகளுக்கு..

கொள்முதல் லாபம் அதிகரிக்கும். இதனால் கால்நடைகளை வாங்கி மகிழ்வார்கள். அதே சமயம் பாசனத்துறையில் கூடுதல் கவனம் செலுத்தவும். மற்றபடி நினைத்த  வேலைகளை நினைத்த மாதிரியே செய்து முடிப்பீர்கள். பழைய குத்தகை பாக்கிகளை திரும்பச் செலுத்தி புதிய குத்தகைகளையும் பெறுவீர்கள். புதிய உபகரணங்கள் வாங்கும்  யோகமும் உண்டாகும். 

அரசியல்வாதிகளுக்கு..

வருமானம் சீராக இருந்தாலும் வழக்கு விஷயங்களுக்குச் சிறிது செலவு செய்ய நேரிடும். மற்றபடி உங்கள் எண்ணங்கள் சரியான காலகட்டத்தில் பயனளிக்கும். மக்களின்  சரியான தேவைகளுக்காகப் பாடுபடுவர். கொடுத்த வாக்கை எப்பாடுபட்டாவது காப்பாற்றி விடுவீர்கள். 

கலைத்துறையினருக்கு..

புதிய வாய்ப்புகளைக் கடும் போட்டிக்குப் பிறகே பெற முடியும். அதனால் உற்சாகத்துடன் பணியாற்றுவீர்கள். சச்சரவை ஏற்படுத்தும் விஷயங்களில் வாயைக் கொடுத்து  மாட்டிக்கொள்ள வேண்டாம். மேலும், யாரிடமும் வெளிப்படையாகப் பழக வேண்டாம்