மீன ராசி அன்பர்களே..!!குருப்பெயர்ச்சி

இதுவரை பாக்கிய ஸ்தானமான ஒன்பதாம் இடத்தில் இருந்துவந்த குருபகவான் இனிவரும் காலங்களில் ஜீவன ஸ்தானத்திலிருந்து தங்களின் எண்ணத்தை செயல்  வடிவமாக மாற்றுவார். தனவரவுகள் சிறப்பாக அமையும். குடும்பத்தில் புதிய உறுப்பினர்களின் வருகையால் குதூகலமும், மகிழ்ச்சியும் அதிகரிக்கும்.

செய்தொழிலில் டென்ஷன் குறைந்து நிம்மதியாகப் பணியாற்றுவீர்கள். நல்ல செய்தியுடன் திருப்பமும் வரும். திருட்டுப்போன பொருட்கள் திரும்ப கைக்கு வந்து சேரும்.  விலகி இருந்த நண்பர்கள் திரும்ப வந்து சேர்ந்துகொள்வார்கள். குடும்பத்தில் அமைதி நிலவும். குடும்ப பிரச்னைகள் சரியாகும். 

செய்தொழிலை சீர்திருத்தம் செய்து தகுந்த ஆலோசனைகளைப் பெறுவீர்கள். அதேநேரம் எதிர்பாராத விவகாரங்களில் அனாவசியமாகத் தலையிட வேண்டாம். மனதில் புதிய சிந்தனைகள் உருவாகும். லாபம் இரட்டிப்பாகும். பங்கு வர்த்தகத்தில் லாபம் கிடைக்கும் புதிய பொறுப்பு ஒன்று தானாக தேடிவரும். சமுதாயத்தில் உயர்ந்த அந்தஸ்து  கௌரவம் வரத்தொடங்கும். 

விடாமுயற்சியும், போராட்ட குணமும் மீன ராசிக்காரர்களுக்கு இயல்பாகவே இருக்கும். தலைமைப் பண்பு இவர்களிடம் அதிகமாகவே இருக்கும். மொத்தத்தில் பலவகையான மாற்றங்களைக் குருபகவான் உங்களுக்குத் தரப்போகிறார். 

உங்கள் வார்த்தைக்கு அனைவரும் கட்டுப்படுவார்கள். பணம் சார்ந்த விஷயங்களில் இருந்துவந்த தடைகள் நீங்கும். நண்பர்கள் விஷயத்தில் சற்று கவனமாக இருப்பது  நல்லது. பழைய வண்டி வாகனங்களை மாற்றுவீர்கள். உடல்நலக் கோளாறுகள் அனைத்தும் சரியாகும் காலகட்டமிது. 

10-ல் குரு வருவதால் நிறையக் கொடுத்தாலும் தேவையில்லாது மன சஞ்சலமும் ஏற்பட வாய்ப்புள்ளது. கவனமாக இருப்பது நன்மையைத்தரும். தெய்வ வழிபாடு, நல்ல  அனுகூலத்தைத் தரும். புதிய விஷயங்களில் முதலீடு செய்வதைத் தவிர்க்கவும். 

உத்தியோகஸ்தர்களுக்கு..

இந்தக் குருப்பெயர்ச்சியில் கடமை தவறாமல் உழைப்பார்கள். மேலதிகாரிகளிடம் உங்கள் கோரிக்கைகள் நிறைவேற்றிக் கொள்வீர்கள் சக ஊழியர்களும் உங்களிடம் நட்புடன்  பழகுவார்கள். குடும்பத்தை விட்டுப் பிரிந்திருந்தவர்கள் இந்தக் குருப்பெயர்ச்சியில் விரும்பிய இடமாற்றம் பெற்று குடும்பத்துடன் இணைவார்கள். அலுவலகத்தில் உங்கள்  கௌரவம் உயரக் காண்பீர்கள். 

வியாபாரிகளுக்கு..

கொடுக்கல் வாங்கல் சிறப்பான பலனைக் கொடுக்கும். இந்தக் குருப்பெயர்ச்சி காலத்தில் உங்கள் எண்ணங்கள் செயல்களில் பிரதிபலிக்கும். இதுவரை புதிய துறைகளில்  இறங்கப் பயந்தவர்கள் துணிந்து இறங்கி வெற்றிக் கொடி நாட்டுவார்கள். பணத் தட்டுப்பாடும் எதுவும் வராது. கூட்டாளிகளும் முழுமையான ஒத்துழைப்பை நல்குவார்கள்.

விவசாயிகளுக்கு..

தானிய உற்பத்தியில் மகிழ்ச்சிகரமான நிலையைக் காண்பார்கள். இத்துடன் உங்களின் கையிருப்பு பொருட்களுக்கும் சந்தையில் நல்ல விலை கிடைக்கும். உங்களுக்குக் கீழ்  வேலை செய்யும் விவசாய கூலிகளுக்குத் தேவையானதைச் செய்வீர்கள். புதிய மாற்றுப் பயிர்களைப் பயிர் செய்து எதிர்பார்க்காத மகசூலைக் காண்பீர்கள். புதிய பூமி வாங்க  நினைத்தவர்கள் இந்தக் குருப்பெயர்ச்சியில் வாங்குவீர். 

அரசியல்வாதிகளுக்கு..

புதிய முயற்சிகளில் உழைப்பிற்கேற்ற பலன் பெறுவார்கள். அரசு அதிகாரிகளிடம் உங்கள் செல்வாக்கு அதிகரிக்கும். எதிர்பார்க்கும் நல்ல காரியங்களில் வெற்றி கிடைக்கும்.  உங்களின் பெயர், புகழ் கூடும். தொண்டர்களின் ஒத்துழைப்பும் கிடைக்கும். உங்களை கவிழ்க்க நினைக்கும் எதிரிகளிடம் கவனமாக இருப்பது நல்லது. 

கலைத்துறையினருக்கு..

இந்தக் குருப்பெயர்ச்சியில் தங்கள் திறமைக்குத் தகுந்த மதிப்பும், அங்கீகாரமும் பெறுவீர்கள். புதிய ஒப்பந்தங்கள் உங்களை நாடி வருவர். அதேநேரம் ரசிகர்களைக்  கௌரவப்படுத்தவும். உங்களை உணர்ந்து செயலாற்றுவீர்கள். சக கலைஞர்களிடமும் உதவிகளைப் பெறுவீர்கள். 

பெண்மணிகளுக்கு..

இந்தக் குருப்பெயர்ச்சியில் புதிய ஆடை அணிகலன்களை வாங்கி மகிழ்வார்கள். குடும்பத்தில் மதிப்பு, மரியாதை உயரும். கணவரிடம் ஒற்றுமை அதிகரிக்கும். தெய்வ  பலத்தைப் பெருக்கிக் கொண்டால் பிரச்னைகளிலிருந்து தப்பிக்கலாம். இல்லத்தில் திருமணம் போன்ற சுபநிகழ்ச்சிகள் நடக்கும். உறவினர்களிடமும் எதிர்பார்த்த ஆதரவைப்  பெறுவீர்கள். 

மாணவமணிகளுக்கு..

படிப்பில் கவனம் சிதறாமல் இருக்கவும். எதிர்பார்த்த மதிப்பெண்களைப் பெறுவீர்கள். பெற்றோர்களின் ஆதரவைப் பெறுவீர்கள். 

பரிகாரம்: வெள்ளிக்கிழமை தோறும் மகாலட்சுமியை வழிபட்டு வர சகல விதமான ஐஸ்வர்யங்களும் கைகூடும்.