விமானத்தில் செல்லும் பொழுது கைபேசியை பிளைட் மோடில் மாற்றாமல் விட்டால் என்ன நடக்கும்?

விமானத்தில் செல்லும் பொழுது (விமானம் மேல் எழும்பும் போதும், தரை இறங்கும் போதும்) கைபேசியை பிளைட் மோடில் மாற்றாமல் விட்டால் விமானத்திற்கு ஒன்றும் நடக்காது, நமது கைபேசியின் மின்கலம் (பேட்டரி) வலுவிழக்கும், விமான சிப்பந்திகளின் பணிச்சுமை கூடும், இதர பயணிகளுக்கு அசவுரியமாக இருக்கும்.

ஓடுதளத்தில் விமானம் சுமார் 140-200 கிமீ வேகத்தில் பயணிக்கும். இந்த சூழலில் தொடர்பை தக்கவைத்துக் கொள்ள நமது கைபேசி மாறி மாறி ஒவ்வொரு டவருடன் தொடர்பை புதிப்பித்துக்கொண்டே இருக்கும்.

பேசிக்கொண்டே நாம் வாகனத்தில் பயணித்துக்கும் பொழுது நமது கைபேசி பேட்டரி விரைவாக முடிவதற்கு இதுவே காரணம்.

ஒவ்வொரு கைபேசியின் தகவல் தொடர்பு (சிக்னல்) துண்டிக்கப்படும்போது, நமது கைபேசி அதன் சமிக்ஞையை அதிகரிக்கும் (boost its signal) இதனால் பேட்டரி சக்தி மேலும் அதிகமாக விரையமாகும்.