வீட்டில் உணவுப் பொருட்கள் வீணடிக்கப்படுவதைத் தவிர்க்க நீங்கள் கூறும் வழிமுறைகள் எவை?

 • தேவையான காய்கறிகள் மட்டும் இரண்டு நாட்களுக்கு ஒரு முறை வாங்கி கொள்வேன். இப்போது குளிர் சாதன பேட்டி இருந்தால் கூட இதையே பின்பற்றுகிறேன். இரண்டு நாட்களுக்கு மேலாக காய்கறிகள் மிஞ்சினால், அடுத்த நாள் அதற்கு ஏற்றார் போல் காய்கறி வாங்குவதை குறைத்து கொள்வேன். பழைய காய்கறியை சீக்கிரம் காலி செய்து விடுவேன்.
 • ப்ரோக்கோலியின், காலிபிளார் தண்டுகள் போன்றவற்றை Vegetable Stock செய்ய பயன்படுத்தி கொள்வேன்.
 • காய்கறி இலைகள், தோல், முட்டை ஓடு ஆகியவை உரமாக என் செடிகளுக்கு பயன்படும்.
 • மதிய உணவுக்கு மட்டுமே சாதம் செய்வேன், முடிந்த அளவு மிச்சம் வராத அளவு ஆனால் அனைவரும் திருப்தியாக சாப்பிடும் அளவு செய்வேன் ஒரு வேளை சோறு மிஞ்சி விட்டால் இரவு உணவு அல்லது தின்பண்டமாக Fried rice, arancini, பால் சாதம் ஆகியவை செய்து விடுவேன்.
 • பருப்பு வகைகள் , மாவு வகைகள் அனைத்தும் தேவைக்கேற்ப வாங்கி கொள்வேன். காற்று புகாத கண்ணாடி குடுவையில் போட்டு கொண்டால் பூச்சி வராது. இந்தியாவில் இருந்து கொண்டு வரும் மசாலா பொருட்களையும் அவ்வாறு அடைத்து வைத்து விடுவேன்.
 • புதினா, கொத்தமல்லி, பாசில், தில் போன்ற சமையலில் உபயோகபடுத்தும் இலைகளை வீட்டிலேயே வளர்த்து கொள்வேன். கடையில் வாங்கினால் கட்டு பெரிதாக இருக்கும், ஓரிரு நாட்களில் காலி பண்ண முடியாது.
 • பால், தயிர் எல்லாம் இரண்டு நாட்களுக்கு தேவையானது மட்டுமே வாங்கி கொள்வேன்.
 • பொதுவாக பழங்கள் அதிகமாக வீணடிக்கப்படும், ஆப்பிள் இரண்டு நாட்களுக்கு மேல் இருந்தால் மில்க் ஷேக் ஆகிவிடும், வாழைப்பழம் கனிந்து விட்டால் பனானா பிரட், பனானா கேக், பனானா ஸ்மூத்தி ஆகி விடும். பழங்களே இரண்டு நாட்களுக்கு மேல் காலியாகவில்லை என்றால் ஸ்மூத்தி சரியான நண்பன். ஒரே வேளையில் அனைத்தும் காலி.
 • அதே போல் காய்கறிகள் காலி ஆகாமல் இருந்தால் சூப் ஒரு சிறந்த உணவு. நிறைய காய்கறி செலவாகும், சத்தானதும் கூட.
 • தோலோடு சிக்கன் தொடை பகுதி, கால் பகுதி, முழு கோழியாக தான் கிடைக்கும், தோலை உரித்து தான் பயன்படுத்துவேன். உரித்த தோலை மற்றும் எலும்பை Chicken stock செய்ய பயன்படுத்தி கொள்வேன். சிக்கனின் நெஞ்சு பகுதியை(Chicken Breast) வாங்கி சமைப்பதை விட, தோலுரித்து எலும்பெடுத்து சமைத்தல் தான் எனக்கு பிடிக்கும்.
 • நான் தயாரிக்கும் Stock-ஐ தேதி எழுதி, உறைய வைத்து விடுவேன். சூப் செய்யும் போது ஒரு துண்டை எடுத்து போட்டால் சுவையாக இருக்கும்.